இந்நிலையில், இன்று சிவானந்தம் சாலையில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திலும் விஜய் பங்கேற்கிறார்.10 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கவிருக்கும் நிலையில் விஜய் பேசுவதற்கான மேடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதில், “திரு. மு.க ஸ்டாலின் தலைமையிலான சமூக அநீதி அரசுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். #TNDemandsJustice என வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது

மேலும், ‘Sorry வேண்டாம் நீதி வேண்டும்.’ ‘உயிரின் மதிப்பு புரியுமா மன்னராட்சிக்கு புரியுமா..’ ‘SIT இருக்க சிபிஐ எதற்கு?’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளும் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வாசகங்களை விஜய்யும் கோஷமாக எழுப்புவார் என தெரிகிறது.
