Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தவெக வடக்கு மண்டல பூத் கமிட்டி கருத்தரங்கம் – வேலூரில் புஸ்ஸி ஆனந்தை களமிறக்கிய விஜய்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2025
in அரசியல் செய்திகள்
0
தவெக வடக்கு மண்டல பூத் கமிட்டி கருத்தரங்கம் – வேலூரில் புஸ்ஸி ஆனந்தை களமிறக்கிய விஜய்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மண்டல பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் கடந்த மாதம் கோவையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வடக்கு மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களை ஒருங்கேயிணைத்து 2-ம் கட்ட பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டிருக்கும் த.வெ.க தலைவர் விஜய், அதற்கான இடம் தேர்வில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை களமிறக்கிவிட்டிருக்கிறார். முன்னதாக இன்று (26-5-2025) காலை, மேல்மருவத்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு வந்தார்.

புஸ்ஸி ஆனந்த்

ஆரணியில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிறகு வேலூர் அருகிலுள்ள பள்ளிகொண்டா கந்தனேரிக்கு மாலை 6.30 மணியளவில் வந்தார். கந்தனேரியில், பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டிய விசாலமான இடத்தை கருந்தரங்கிற்காக தேர்வு செய்யலாமா? என்று பார்வையிட்டு வேலூர் மாவட்ட த.வெ.க நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். பிறகு வேலூரில் இருந்து புறப்பட்டு சென்றார் புஸ்ஸி ஆனந்த். அப்போது, த.வெ.க-வின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மேற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இம்தியாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

‘அரக்கோணம் சம்பவம் ஒரு வெட்கக்கேடு; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!’ – தவெக அறிக்கை!



.

Previous Post

இந்தியா முழுவதும் பயணிக்க FASTag ரீசார்ஜ் தேவையில்லை… புதிய நடைமுறைகள் என்னென்ன…?

Next Post

Indian Economy | உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Indian Economy | உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா

Indian Economy | உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In