Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

வருகிறது ‘பிச்சைக்காரன் 3’ – உறுதி செய்த விஜய் ஆண்டனி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in சினிமா செய்திகள்
0
வருகிறது ‘பிச்சைக்காரன் 3’ – உறுதி செய்த விஜய் ஆண்டனி
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூன்றாம் பாகத்தை நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உறுதி செய்துள்ளார். இப்படம் 2025-ம் ஆண்டு தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘பிச்சைக்காரன்’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே எழுதி இயக்கியுள்ளார். மேலும், அவரே படத்துக்கு இசையமைத்து படத்தொகுப்பும் செய்துள்ளார். இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவிருப்பதை விஜய் ஆண்டனி உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், இப்படம் முதல் இரண்டு பாகங்களுக்கு தொடர்பில்லாதது என்றும், இது முற்றிலும் புதிய கதைக்களத்தைக் கொண்டு உருவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இப்படம் 2025-ல் தான் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய் ஆண்டனி ‘ரத்தம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘வல்லி மலை’, ‘அக்னி சிறகுகள், ‘கொலை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படங்களின் ரிலீஸுக்குப் பிறகே ‘பிச்சைக்காரன் 3’ பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

.

Tags: antoneyvijay antonyபிச்சைக்காரன்விஜய்விஜய் அந்தோனி
Previous Post

ஓய்வுகால முதலீட்டுக்கு ஏற்றது எது.. PPF Vs NPS வரை.. கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?

Next Post

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி; சிலைகள் சேதம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்த மனநலம் குன்றியவர் பிடிபட்டார்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி; சிலைகள் சேதம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்தவர் பிடிபட்டார்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி; சிலைகள் சேதம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்த மனநலம் குன்றியவர் பிடிபட்டார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In