Last Updated:
மத்திய பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த 23 வயது பரினிதா ஜெயின் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த 23 வயதே ஆன பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு (Heart Attack) என்பது ஆண், பெண் என வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வருகிறது. அதிலும் ஏதேனும் ஒரு சுப நிகழ்ச்சியில் நல்ல முறையில் சந்தோஷமாக நடனமாடிக்கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
அந்தவகையில் மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷா மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது நிகழ்ச்சியில் 23 வயதே ஆன இந்தூரை சேர்ந்த பரினிதா ஜெயின் என்பவர் மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் அந்த பரினிதா திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்ச்சியடைந்தனர்.
SHOCKING NEWS 🚨
Lady passes away while dancing due to Heart Attack in MP’s Vidisha.pic.twitter.com/rlyggU9K7C
— Times Algebra (@TimesAlgebraIND) February 9, 2025
இந்நிலையில், மேடையில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரின் உறவினர்கள் கதறியழுதனர். திருமண நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கண்கலங்கும் வகையில் இருந்தது. இந்நிலையில் இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
February 10, 2025 3:26 PM IST


