Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்றபடி விடியோ எடுத்த சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்றபடி விடியோ எடுத்த சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சமூக ஊடக ரீல்ஸ் மோகம் இளைஞர்களின் உயிருக்கு எமனாக மாறி வருவதை பிகாரில் இன்று(அக். 3) நடந்த கோர விபத்து நமக்கு உணர்த்துகிறது.

பிகாரில் பூர்ணியா அருகே 14 முதல் 19 வயதுக்குள்பட்ட பதின்பருவ சிறார்கள் ஐவர், துர்கா பூஜை விழாவுக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை(அக். 3) அதிகாலை 5 மணியளவில் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்படும் போது அவ்வழியாக மிக வேகமாகச் சென்று கொண்டிருந்த ஜோக்பனி – தானாபூர் வந்தே பாரத் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிகாரில் பூர்ணியா, அரரியா, மதேபுரா, சஹர்சா, ககரியா, பேகூசராய், சமஸ்திபுர், முஜஃப்ஃபர்புர், வைஷாலி, பாட்னா ஆகிய மாவட்ட ரயில் பயணிகளுக்கு நேரடி பலனளிக்கும் விதத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த மாதம் பிரதமர் மோடியால் கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில் சிறார்களின் உயிருக்கு எமனாக அமைந்துவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து வடக்கு ஃப்ராண்டியர் ரயில்வே (என்எஃப்ஆர்) நிர்வாகத்தின் தலைமை அதிகாரியொருவர் கூறுகையில், “இன்று அதிகாலை 4.54 மணியளவில் ஜோக்பனி – தானாபூர்(26301) வந்தே பாரத் ரயில் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. பூர்ணியா – கஸ்பா ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு இடத்தில் அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய மேர்கண்ட நபர்கள் சமூக ஊடகத்தில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நின்று விடியோ எடுத்துக் கொண்டிருந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. எனினும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

four teenagers, who were allegedly shooting Instagram Reels on a railway track, were run over by the



.

Previous Post

கரூர் சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras High Court orders Special Investigation Team headed by Asra Garg to investigate Karur incident

Next Post

தவெக விஜய் பிரசாரம்: ‘கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்’ – முதல்வருக்கு பாஜக எழுதியிருக்கும் கடிதம் | ‘Questions must be answered’ – BJP’s letter to the Chief Minister!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தவெக விஜய் பிரசாரம்: ‘கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்’ – முதல்வருக்கு பாஜக எழுதியிருக்கும் கடிதம் | ‘Questions must be answered’ – BJP’s letter to the Chief Minister!

தவெக விஜய் பிரசாரம்: 'கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்' - முதல்வருக்கு பாஜக எழுதியிருக்கும் கடிதம் | 'Questions must be answered' - BJP's letter to the Chief Minister!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In