படித்த இளைஞர்கள் தங்களது பலம், பலவீனத்தை அறிந்து செயல்பட வேண்டும், இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது போதைப் பழக்கம் மற்றும் கைப்பேசியுமே என்று பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் , ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ , மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கௌரவித்தார்.
இதனை தொடர்ந்து, வேல்ராஜ் பேசுகையில், அதிகமான இளைஞர்களை கொண்டது இந்தியா எனவும் , அதிலும் படித்த இளைஞர்கள் அதிகமாகக் கொண்டது தமிழ்நாடு, இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் கையில் உள்ளது, மாணவர்கள் தங்களது பலம், பலவீனத்தை பற்றி அறிந்து செயல்பட வேண்டும் எனவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடையாக இருப்பது போதை பொருளும், கைப்பேசி மட்டுமே என்றார் அவர்.
ஆகவே அதை இரண்டையும் அறவே பயன்படுத்தவில்லை என்றால் நாடும், வீடும் வளர்ச்சி பெறும் என்றார். முன்னதாக கல்லூரி தாளாளர் ஹரி தியாகராஜன் சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

