பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முக்கியமான தருணத்தில் விளையாட முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.
பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வீழ்த்தியது. முதுகுப் பிடிப்பின் காரணமாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.
