Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வேங்கைவயல்: "தமிழக அரசு கூறுவது சரியல்ல; சிபிஐ-க்கு மாற்றுங்கள்" – சிபிஎம் பெ.சண்முகம் வலியுறுத்தல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 24, 2025
in அரசியல் செய்திகள்
0
வேங்கைவயல்: "தமிழக அரசு கூறுவது சரியல்ல; சிபிஐ-க்கு மாற்றுங்கள்" – சிபிஎம் பெ.சண்முகம் வலியுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் நீர்தேக்கத் தொட்டியில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் மாநில முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதோடு, குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்ற அழுத்தமும் ஆளும் தி.மு.க அரசுக்கு ஏற்பட்டது.

வேங்கைவயல்
வேங்கைவயல்

ஆனால், சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றனர். இதனாலேயே, தி.மு.க அரசு மீது கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. மறுபக்கம், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்தும் வந்தனர். இத்தகைய சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததது.

விசாரணையில், “சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முட்டுக்காடு பஞ்சாயத்தின் தலைவர் பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தைப் பணி நீக்கம் செய்ததற்குப் பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலைப் பரப்பினார். அதன்பின், குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டனர்” என்று தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வழக்கை முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே காரணம் கூறுவது சரியல்ல என்று தமிழக அரசை விமர்சித்து, வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

வெளிவராத பரிசோதனை முடிவுகள், நீடிக்கும் குடிநீர் மரண மர்மங்கள், இன்னொரு ‘வேங்கைவயல்’ஆகும் பல்லாவரம்!

இதுகுறித்த அறிக்கையில், “சி.பி.சி.ஐ.டி போலீஸார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரைப் பழிவாங்க வேண்டுமென்பதற்காகத் தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்குக் காரணம் என்பது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.” என்று பெ. சண்முகம் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

2 ஆண்டுகள்… ஆயிரம் கேள்விகள்! – ‘வேங்கைவயல் எனும் மாபெரும் அவமானம்!’

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி

Next Post

TVK: ’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK: ’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!

TVK: ’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In