வேலு நாச்சியார் பிறந்த நாளுக்கு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்று அழைக்கப்படும் வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாள் இன்று(ஜன. 3) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தையரியம்மிக்க ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்வோம். ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீரப் போராட்டத்தை நடத்தியவர். ஈடு இணையற்ற வீரத்தையும், புத்தாலித்தனத்தையும் அவர் வெளிக்காட்டினார்.
