Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“நடிகர்கள், குரலற்ற மக்களுக்குப் பணி செய்துவிட்டு, அரசியலுக்கு வரவேண்டும்" – சொல்கிறார் வேல்முருகன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 23, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
``நடிகர்கள், குரலற்ற மக்களுக்குப் பணி செய்துவிட்டு, அரசியலுக்கு வரவேண்டும்" - சொல்கிறார் வேல்முருகன்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

” `மீனவர்களுக்கென ஓர் அமைச்சகத்தை உருவாக்குவோம். மீனவர்களின் பிரச்னைகளை உடக்குடன் தீர்ப்போம்’ என்று வாக்குறுதியளித்த பா.ஜ.க, தற்போது கள்ள மௌனம் காக்கிறது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

வேல்முருகன்

தமிழ்நாடு சட்டமன்ற உறுதி மொழிக்குழு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில், சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “இந்தக் குழு ஓராண்டுக்கு அதிகபட்சமாக 20 மாவட்டங்களைத்தான் ஆய்வுசெய்ய முடியும், அரசு உறுதி மொழிக்குழு என ஒன்று இருப்பதே அரசு அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. அரசின் உறுதிமொழிகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

சிவகங்கை, தேவகோட்டை நகராட்சிகளில் குப்பை கொட்டுவதற்கு மாற்று இடம் வழங்க ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

சங்கிகளின் கூட்டத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஆளுநர், இந்திய அரசின் சட்டத்துக்கு விரோதமான வேலைகளைச் செய்கிறார். தமிழகம் இதனை பொறுத்துக்கொள்ளாது. கண்டிப்பாக எதிர்வினையாற்றும்.

வேல்முருகன்

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, ஐந்து சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டிருக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகள் குறித்த பட்டியல், ஒன்றிய அமைச்சருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பதிலுக்காகக் காத்திருக்கிறோம். அகற்றவில்லையென்றால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் தொடரும்.

அண்ணாமலைக்கு அகில இந்திய தலைவராவதற்கு தகுதி இருக்கிறதா என்ற விவகாரத்தில், பா.ஜ.க-விலிருந்து விலகிய தலைவர்கள் அவருக்குப் பல சான்றுகளை வழங்கியிருக்கின்றனர்.

நடிகர்கள் நசுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, குரலற்ற மக்களுக்கு சிலகாலம் பணி செய்துவிட்டு, பின்னர் அரசியலுக்கு வரவேண்டும்.

மீனவர்களுக்கென ஓர் அமைச்சகத்தை உருவாக்குவோம். மீனவர்களின் பிரச்னைகளை உடக்குடன் தீர்ப்போம் என்று வாக்குறுதியளித்த பா.ஜ.க, தற்போது கள்ள மௌனம் காக்கிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுவதற்கு அண்ணாமலையின் பதில் என்ன?

அண்ணாமலை

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின்போது ராணுவ ஆட்சி போன்று நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டு ஆட்டம்போட நினைத்தால், அதற்கான தகுந்த பாடத்தை தமிழக, தென் இந்திய மாநில மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் கற்பிப்பார்கள்” என்றார்.

`சினிமா பிரபலமாக இருந்தால் முதல்வராகலாம் எனக் கருதுகிறார்கள்!’ – திருமாவளவன்

.

Tags: அரசயலகககரலறறசயதவடடசலகறரநடகரகளபணமககளககபவரவணடமquotவலமரகன
Previous Post

லாலு பிரசாத்தின் காலை தொட்டு வணங்கிய முதல்வர் ஸ்டாலின்! பாட்னாவில் நெகிழ்ச்சி.. அது என்ன புத்தகம்?

Next Post

Chennai: 5000 ரூபாய் கொடுத்தால் போதும்;காலை டிபன்; மதியம் பிரியாணி; நாள் முழுக்க பெண் உல்லாசம்; சென்னையில் 5 பேர் கைது!-3 women involved in domestic prostitution business in chennai have been arrested

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Chennai: 5000 ரூபாய் கொடுத்தால் போதும்;காலை டிபன்; மதியம் பிரியாணி; நாள் முழுக்க பெண் உல்லாசம்; சென்னையில் 5 பேர் கைது!-3 women involved in domestic prostitution business in chennai have been arrested

Chennai: 5000 ரூபாய் கொடுத்தால் போதும்;காலை டிபன்; மதியம் பிரியாணி; நாள் முழுக்க பெண் உல்லாசம்; சென்னையில் 5 பேர் கைது!-3 women involved in domestic prostitution business in chennai have been arrested

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In