நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தாணிகோட்டகம் ஊராட்சியில்75 வது குடியரசு தின தேசிய கொடியை ஊராட்சி மன்ற தலைவர். பா. முருகானந்தம் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
மேலும் அதனை தொடர்ந்து கிராம சபாகூட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் 126 பேரும் ஆண்கள் 96 பேரும் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர் எம் எஸ் வைத்தியநாதன், ஊராட்சி துணைத் தலைவர் கார்த்திகேயன், ஊராட்சி உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி பொதுமக்கள், அரசு அலுவலர்களும் கிராம மக்களும் வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு பல்வேறு குறைகளை முன் வைத்தனர்.
அதனை உடனடியாக சரி செய்வதாக அரசு அலுவலகர்களின் மத்தியில் ஊராட்சி மன்ற தலைவர் குறைகளை ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் இடையில் வாக்குறுதிகளை அளித்தார்.



