இது எச்.ராஜாவின் கருத்து போல உள்ளது. அவர் தான், பாஜகவுக்கு எதிராக பேசினால் ‘ஆண்டி இந்தியன்’ என்பார். அதே போல தான், அதிகாரத்தைப் பற்றி கேட்டால், ‘இவன் பாஜக.,காரன், சங்கி..’ என்கிறார்கள். என்னுடைய ட்ராக் ரெக்கார்டை எடுத்துப் பாருங்கள், நான் போவதாக இருந்தால் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போயிருக்க முடியும். இன்று விசிகவின்., கொடியை எந்த இடத்திலும் ஏற்ற முடியவில்லை. இந்த ஆட்சியில் ஏன் இது நடக்கிறது? மதுரையில் சமீபத்தில் எங்கள் தலைவர் இது பற்றி பேசியிருக்கிறார்.
