சனாதன எதிர்ப்பு என்பதை பலரும் பேசினார்கள். ஆனால், திருமாவளவன் “சனாதன எதிர்ப்பு மாநாடு’ என அதைக் கையில் எடுத்தபோது, அது தேர்தலிலும் முக்கிய விவாதமாக மாறியது. பவளவிழா காணும் தி.மு.க இந்தியாவிலேயே மாநில சுயாட்சி பற்றி முதன் முதலாக பேசியது. அதைத் தொடர்ந்து வி.சி.க ‘மாநில சுயாட்சி மாநாடு’ நடத்தியது. அது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதுபோலதான் மது ஒழிப்பு மாநாடும். காங்கிரஸ், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா எனப் பலரும் மது ஒழிப்புக்கு ஆதரவாக இருந்தார்கள்.