Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விருதுநகரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
விருதுநகரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
43
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பட்டா பெயர் மாற்றுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ இன்று கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேற்கு காளையார் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (45). விவசாயி. உள்ளூரில் தனக்குச் சொந்தமான இடத்தை அளந்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இடத்தை அளந்து கொடுப்பதற்கு விஏஓ பாலமுரளி (37) என்பவர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலகிருஷ்ணன், இது குறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதையடுத்து, மேற்குகாளையார் கரிசல்குளத்தில் உள்ள விஏஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமி நாதன் மற்றும் போலீஸார் இன்று சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, விவசாயி பாலகிருஷ்ணனிடமிருந்து விஏஓ பாலமுரளி ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விஏஓ பாலமுரளியை கைது செய்தனர். மேலும், அவர் கையிலிருந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக் களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட விஏஓ பாலமுரளி அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பதால் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

.

Tags: ஆயரமகதர.3லஞசமவஏஓவஙகயவரதநகரல
Previous Post

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்

Next Post

காவிரி பிரச்னையில் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு ஏன்? – இபிஎஸ் விளக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காவிரி பிரச்னையில் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு ஏன்? - இபிஎஸ் விளக்கம்

காவிரி பிரச்னையில் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு ஏன்? - இபிஎஸ் விளக்கம்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    விஏஓ வை லஞ்ச ஒழிப்புத்துறையில் பிடித்துக் கொடுத்த பாலகிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துக்கள் இதேபோன்று லஞ்சம் கேட்டால் உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறையை தொடர்பு கொண்டு புகார் செய்து லஞ்சம் வாஙகுபவரை பிடித்துக் கொடுக்க முன் வர வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In