Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Vantara | லேசர் சிகிச்சை முதல் எண்டோஸ்கோபி வரை.. வனவிலங்குகளுக்கான ‘வாந்தரா’ சிகிச்சை மையத்தில் இவ்வளவு வசதிகள் இருக்கா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 14, 2025
in அரசியல் செய்திகள்
0
Vantara | லேசர் சிகிச்சை முதல் எண்டோஸ்கோபி வரை.. வனவிலங்குகளுக்கான ‘வாந்தரா’ சிகிச்சை மையத்தில் இவ்வளவு வசதிகள் இருக்கா?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


குஜராத்தில் உள்ள ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தில் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரிலையன்ஸ் கிரீன் பெல்ட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனந்த் அம்பானியின் கனவுத் திட்டமான இது, இலாப நோக்கமற்ற விலங்கு நல அமைப்பின் மகத்தான பணியை எடுத்துக்காட்டுகிறது.

‘கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (GZRRC)’ மூலம் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன விலங்கு மீட்பு மையத்தை ‘வந்தாரா’ உருவாக்கியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்தும் மீட்கப்பட்ட 1,50,000-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, விலங்குகளுக்கு சிறந்த சூழலை வழங்கி வருகிறது. எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் முதல் எம்ஆர்ஐ வரை அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. எந்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையையும் செய்யும் திறன் கொண்ட அறுவை சிகிச்சை பிரிவுகளும் இங்கு உள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த மருத்துவமனை வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து வகையான விலங்குகளையும் பராமரிப்பதும், ஆராய்ச்சி செய்வதும் இதன் நோக்கமாகும்.

சிறுத்தைகள், தேவாங்கு, கழுகுகள், கானமயில் (கிரேட் இந்தியன் பஸ்டர்ட்) போன்ற அரிய வகை உயிரினங்களைப் பாதுகாத்து இனப்பெருக்கம் செய்வதற்கான சிறப்புத் திட்டங்களையும் ‘வந்தாரா’ முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட விலங்குகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. வனவிலங்கு உயிரியலாளர்கள், சூழலியலாளர்கள், கால்நடை மருத்துவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட திறமையான நிபுணர்கள் குழு ‘வந்தாரா’ திட்டத்திற்கு உறுதுணையாக உள்ளனர். இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள சட்டப்பூர்வ மற்றும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. பல உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்திடமிருந்தும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

சிறுத்தைகளைப் பராமரிப்பதிலும், இனப்பெருக்கம் செய்வதிலும் நிபுணத்துவம் பெற்ற வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் விலங்கு நிபுணர்கள் குழு ‘வந்தாரா’ மையத்தில் உள்ளது. நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள சிகிச்சை பிரிவில் 4 அடி உயரம் வரை தூக்கக்கூடிய ஹைட்ராலிக் தளம் உள்ளது.

இந்த மருத்துவமனையில் உள்ள மேம்பட்ட கிரேன் வசதி யானையை எந்த திசையில் வேண்டுமானாலும் நகர்த்த உதவுகிறது. யானைகளுக்கு, கால் பிரச்சனை ஏற்பட்டாலோ, நகரும்போது சிரமம் ஏற்பட்டாலோ இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும். 2 சிறிய ஹைட்ராலிக் தளங்களும் இங்கு உள்ளன. இதன் உதவியுடன் யானையின் உயரமான உடல் பாகங்களான முதுகு மற்றும் நெற்றியில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் 6 அடி உயரம் வரை செல்ல முடியும்.

இதையும் படிங்க | Vantara | வன விலங்குகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘வந்தாரா’ – ரிலையன்ஸ் அறக்கட்டளை புதிய முயற்சி!

லேசர் சிகிச்சை இயந்திரம், தெர்மல் கேமரா, சிறிய டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் சிகிச்சை, நோயறிதல் அல்ட்ராசவுண்ட், நேரடி மற்றும் மறைமுக கண் மருத்துவம், டிஜிட்டல் ஸ்டெதாஸ்கோப், எண்டோஸ்கோபி உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இங்கு உள்ளன. யானை மருத்துவமனையில் உள்ள வீடியோ கான்பரன்சிங் வசதி மிகவும் சிறப்பானது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களுடன் நேரடி ஆலோசனையை மருத்துவர்கள் பெற முடியும். மருத்துவ ஆலோசனைக் குழுவுடன் இணைக்கப்பட்ட வயர்லெஸ் ஆடியோ வசதி மூலம் மருத்துவக் குழுவினருடன் அவர்கள் உரையாடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

First Published :

March 01, 2025 3:20 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Vantara | லேசர் சிகிச்சை முதல் எண்டோஸ்கோபி வரை… வனவிலங்குகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் ‘வாந்தரா’



.

Previous Post

இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திய ஐபிஎல் தொடர்: தினேஷ் கார்த்திக்

Next Post

‘ஊழல்.. 5,000 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பாஜக போராடும்’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘ஊழல்.. 5,000 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பாஜக போராடும்’

'ஊழல்.. 5,000 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பாஜக போராடும்’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In