Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Vantara : 5 குட்டிகளை ஈன்ற சிறுத்தைகள்.. அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கும் வந்தாரா..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 3, 2025
in அரசியல் செய்திகள்
0
Vantara : 5 குட்டிகளை ஈன்ற சிறுத்தைகள்.. அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கும் வந்தாரா..
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 01, 2025 5:21 PM IST

சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) சிறுத்தைகளை சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அவற்றில், ஆசிய இனங்களும் கடுமையான ஆபத்தில் உள்ளன.

சிறுத்தைசிறுத்தை
சிறுத்தை

இந்தியாவில் வனவிலங்குகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘வந்தாரா’ என்பது நாட்டின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அமைப்பாகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் அனந்த் அம்பானி இந்த விலங்கு பராமரிப்பு மற்றும் மீட்பு மையத்தை அமைத்தார்.

அழிந்து வரும் உயிரினங்கள், அரிய விலங்குகள் மற்றும் வேட்டையாடுபவர்களால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்ட விலங்குகளை மறுவாழ்வு செய்து மீண்டும் காட்டுக்குள் விடுவிப்பதே வந்தாராவின் முக்கிய குறிக்கோளாகும். வந்தாரா சரணாலயத்தில் அழிந்து வரும் அரிய வகை உயிரினமாக கருதப்படும் ஒரு சிறுத்தை 5 குட்டிகளைப் பெற்றெடுத்தது.

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள சுத்திகரிப்பு வளாகத்தின் பசுமைப் பகுதியில் வந்தாரா என்று அழைக்கப்படும் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. 3,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வனப்பகுதி, பல்வேறு வகையான உயிரினங்களுக்கு தாயகமாக உள்ளது.

ஆசியாவில் ஒரு காலத்தில் காணப்பட்ட சிறுத்தைகளின் எண்ணிக்கையை மீட்டெடுக்க வந்தாரா சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிறுத்தை பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாட்டில் குறைந்து வரும் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, அவை பிற நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு சிறப்பாக வளர்க்கப்படுகின்றன.

கால்நடை நிபுணர்கள் முன்னிலையில் விலங்குகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஸ்வாரா என்று அன்பாக அழைக்கப்படும் ஒரு சிறுத்தை 5 குட்டிகளைப் பெற்றெடுத்ததாக நிறுவனர் அனந்த் அம்பானி கடந்த டிசம்பரில் தெரிவித்திருந்தார். தாயும் குட்டிகளும் தற்போது மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருவதாகவும் கால்நடை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுக்க இந்த 5 குட்டிகளும் மீண்டும் காட்டுக்குள் விடப்படும் என்று வந்தாரா தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் இந்தியாவில் ஒரு காலத்தில் பரவலாக இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை இப்போது வெறும் 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம், உலகளவில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிகப்பெரிய புலி இனங்களில் ஒன்றாக இந்த சிறுத்தைகள் உள்ளன.

இதையும் படிங்க – Vantara : வந்தாராவில் புதுவாழ்வு பெற்ற ஆப்பிரிக்க காட்டு யானைகள்.. பாராட்டை பெறும் ஆனந்த் அம்பானி

சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) சிறுத்தைகளை சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அவற்றில், ஆசிய இனங்களும் கடுமையான ஆபத்தில் உள்ளன. சட்டவிரோத வேட்டையாடுதல், உணவுப் பற்றாக்குறை, பொருத்தமான வாழ்விடமின்மை மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக சிறுத்தைகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN கூறுகிறது.

First Published :

March 01, 2025 5:21 PM IST



.

Previous Post

வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்ஆப் ‘முத்தலாக்’: கேரள இளைஞா் மீது வழக்கு

Next Post

மத்திய அமைச்சர் மகளைப் பின்தொடர்ந்து சீண்டல்: 7 பேர் மீது வழக்கு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மத்திய அமைச்சர் மகளைப் பின்தொடர்ந்து சீண்டல்: 7 பேர் மீது வழக்கு

மத்திய அமைச்சர் மகளைப் பின்தொடர்ந்து சீண்டல்: 7 பேர் மீது வழக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In