Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மாயமாகும் ராகுல் அணி: காங்.,கில் இருந்து வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 14, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மாயமாகும் ராகுல் அணி: காங்.,கில் இருந்து வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, காங்கிரசில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அக்கட்சியில் இருந்து 12 பெரிய தலைவர்கள் விலகி உள்ளனர்.

அவர்களின் பட்டியல் பின்வருமாறு

மிலிந்த் தியோரா

latest tamil news

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகனான மிலிந்த் தியோரா மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் . மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பினர் நடவடிக்கை காரணமாக அதிருப்தியில் இருந்தார். தற்போது அவர் கட்சியில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளார்.

ஹர்திக் படேல்

latest tamil news

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தில் செல்வாக்கு பெற்ற ஹர்திக் படேல், 2019 ல் ராகுலின் முயற்சியால் காங்கிரசில் இணைந்தார். ஆனால், 2022ல் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் நடவடிக்கை பிடிக்காததால், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.

அஸ்வனி குமார்

முன்னாள் மத்திய அமைச்சரான இவர், 2022ல் காங்கிரசில் இருந்து விலகினார். 2019 ல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்த அவர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகினார்.

சுனில் ஜாகர்

latest tamil news

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுனில் ஜாகர். அம்மாநில காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னியை விமர்சனம் செய்ததற்காக சனில் ஜாகருக்கு மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால், அவர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு மாநில தலைவர் பதவியை பா.ஜ., வழங்கியது.

ஆர்பிஎன் சிங்

latest tamil news

முன்னாள் மத்திய அமைச்சரான ஆர்பிஎன் சிங், 2022ல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். உ.பி.,யில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அவர், தேர்தல் நேரத்தில் பிரியங்கா தலைமையிலான பிரசார குழுவில் இடம் கிடைக்காததால், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.

ஜோதிராதித்யா சிந்தியா

latest tamil news

ம.பி., அரச குடும்பத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமன மாதவ்ராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதித்யா சிந்தியாவும் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்தார். ம.பி.,யில் கமல்நாத் தலைமையில் ஆட்சியில் இருந்தபோது, முதல்வர் மீது அதிருப்தி காரணமாக காங்கிரசில் இருந்து விலகி பாஜ.,வில் இணைந்து மத்திய அமைச்சர் ஆனார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், 2020 ல் ம.பி.,யில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

ஜிதின் பிரசாதா

latest tamil news

மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரும் ராகுலுக்கு நெருக்கமானவருமான ஜிதின் பிரசாதாவும் கடந்த 2021ல் உ.பி., தேர்தலுக்கு முன்னர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.

அல்பேஷ் தாக்கூர்

latest tamil news

குஜராத் மாநில முன்னாள் எம்.எல்.ஏ.,வான அல்பேஷ் தாக்கூர், காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவை மீறி ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு போட்டார். 2019 ல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அனில் அந்தோணி

latest tamil news

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அனில் அந்தோணி, கடந்த ஆண்டு ஜன.,மாதம் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். இதற்கு அவரது தந்தை அதிருப்தி தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்



.

Previous Post

காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனையில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர்

Next Post

தில்லியில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: கல்வித்துறை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தில்லியில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: கல்வித்துறை

தில்லியில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: கல்வித்துறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In