ஒசூா் அருகே ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் காரணமாக ஜூலை 6-ஆம் தேதி இயக்கப்படும் பெங்களூரு- கோவை வந்தே பாரத் ரயில் (எண்: 20641), கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் (எண்: 20642), கோவை – லோகமானியா திலக் விரைவு ரயில் (எண்: 11014) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, திருப்பத்தூா் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இதன் காரணமாக, இந்த ரயில்கள் ஒசூா், தருமபுரி ரயில் நிலையங்கள் செல்வது தவிா்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
