நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, “30 இணையர்களுக்கு சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இன்றைக்கு காதலர் தினம் வேறு. இதைச் சொன்னால் சிலருக்கு கோபம் வரும். காதலர் தினத்தை கொண்டாடக் கூடாதென சொல்வார்கள். அப்படியெல்லாம் இருக்க முடியுமா? ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான். இந்த 30 தம்பதிகளும் நல்ல காதலர்களாக நல்ல நண்பர்களாக வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துகிறேன்.” என்றார்.

