இந்நிலையில் மல்லை சத்யா குறித்து பேசியிருந்த வைகோ, “பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார்” என்று கூறியிருந்தார். வைகோ குறிப்பிட்ட அந்த மாத்தையா யார்?
* கோபாலசாமி மகேந்திர ராஜா எனும் இயற்பெயர்கொண்ட மாத்தையா விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.
* விடுதலைப் புலிகளால் 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘மக்கள் முன்னணி” என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டார்.
*இந்திய உளவு அமைப்பான ‘ரா’வுக்கு அமைப்பின் ரகசியங்களை வெளியிட்டார் என்றும், அமைப்பின் தலைவர் பிரபாகரனைக் கொன்றுவிட்டு தலைமைப் பதவிக்கு வரத் திட்டமிட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்.
* பின்னாட்களில் அந்த அமைப்பால் மரண தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டது.
*அமைப்பின் தலைவரை கொன்றுவிட்டு அந்த இடத்துக்கு வரத் துடித்த மாத்தையா துரோகி என்று வர்ணிக்கப்படுகிறார்.
*இந்நிலையில்தான் தற்போது வைகோ மல்லை சத்யாவை மாத்தையாவுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.

