சமத்துவ நடைபயணத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களை நேர்காணல் செய்வதற்காக மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் 7,000 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளேன். தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள். போதைப்பொருளை பயன்படுத்துவதால் இளம்பெண்கள் மீது பாலியல் தாக்குதல் செய்கிறார்கள்.

சில இடங்களில் பெண்களும் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது.
அரிவாள், பட்டா கத்தியுடன் மாணவர்கள் கல்லூரிக்கு செல்கிறார்கள். இவற்றிலிருந்து மாணவர்களை இளைஞர்களை மீட்க, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்கிறேன்.
