Last Updated:
இந்த சம்பவம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வழியில் பின்னால் வந்த வாகனங்கள் சுதாரித்து திரும்பிக் கொண்டன.
குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள ஆற்றுப் பாலத்தின் நடுப்பகுதி இடிந்ததில், அந்த வழியாக வந்த வாகனங்கள் நடு ஆற்றுக்குள் விழுந்தன. இந்த விபத்தில் சிக்கி தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலி எண்ணிக்கை இன்னும் உயரக் கூடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
வடோதராவின் பத்ரா தாலுகா முஜ்பூர் அருகே இந்த மாகி ஆற்றில் இந்த பாலம் அமைந்துள்ளது. இங்கு இன்று காலையில்தான் இந்த சோக சம்பவம் நடந்திருக்கிறது.
நடு பாலம் உடைந்தபோது அந்த வழியாக வந்த கார் மற்றும் சரக்கு லாரி ஆகியவை மாகி ஆற்றின் நடுப்பகுதிக்குள் விழுந்துள்ளன. இந்த சம்பவம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வழியில் பின்னால் வந்த வாகனங்கள் சுதாரித்து திரும்பிக் கொண்டன.
சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். சரியான பராமரிப்பு இல்லாதது விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
July 09, 2025 11:40 AM IST

