வாடிவாசல் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் விடுதலை – 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.
இதனால், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த சூர்யா அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
