Last Updated:
உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறை சரிவில் சிக்கிய 55 பேரில் 16 பேர் மீட்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணியில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
உத்தராகண்ட் மாநிலம், சமோலியில் பனிப்பாறை சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் இன்று மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளார்.
சீனா எல்லை அருகே உள்ள மானா கணவாய் பகுதியில், எல்லைப்பகுதி சாலைகள் அமைப்பு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, ராட்சத பனிப் பாறை சரிந்து விழுந்ததில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட 55 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து விரைந்த ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்புப் பணியில் தீவிரம் காட்டினர்.
எல்லை சாலைகள் அமைப்பைச் சேர்ந்த 33 பணியாளர்கள் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதில், படுகாயம் அடைந்தவர்கள், கவலைக்கிடமான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது.
4 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம், எஞ்சிய 6 பேரை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்தை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வுசெய்த அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, படுகாயம் அடைந்தவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார்.
Uttarakhand (Uttaranchal)
March 01, 2025 3:27 PM IST
உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் மீட்பு, 4 பேர் உயிரிழப்பு… மற்றவர்களின் நிலை என்ன?

