இந்த 0.25 சதவிகித வட்டிக் குறைப்பையே, ஃபெடரல் ரிசர்வ் வங்கியில் ஆளுநர் ஜெரோம் பவல், “ரிஸ்க் மேனேஜ்மென்ட் கட்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது நிலையற்ற வேலைவாய்ப்பு சந்தை, அதிக பணவீக்கம் ஆகியவை நிலவி வருகிறது. இதை சரிக்கட்ட தான் அவர் வட்டிக் குறைப்பு நடந்திருக்கிறது.

பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும்போது, வட்டி விகிதம் அதிகரிக்கப்படும். ஆனால், அமெரிக்காவில் தற்போது மாறாக, வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
காரணம், அங்கே வேலைவாய்ப்புகளில் நிலையற்ற தன்மை நிலவுவதால், மக்களின் நுகர்வு குறைகிறது.
இதை ஈடுகட்ட தான் தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்களின் நுகர்வு அதிகரிக்கும். நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்; அப்போது வேலைவாய்ப்பு உயரும்… இதன் மூலமும் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
