அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். மறுபக்கம், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் ஜோ பைடனுக்குப் பதில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள்முதலே, `அமெரிக்காவின் முதல் பெண் அதிபராவாரா கமலா ஹாரிஸ்” என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

இன்னொருபக்கம், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா (Tesla), ஸ்பேஸ் எக்ஸ் ( Space X) நிறுவனங்களின் நிறுவனரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவருகிறார். இதற்காகவே, அமெரிக்கா பி.ஏ.சி (America PAC) என்ற இணையதளப் பக்கத்தை எலான் மஸ்க் தொடங்கியிருக்கிறார்.
