Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

US election 2024: `நண்பர் டொனால்ட் ட்ரம்ப்-க்கு மனமார்ந்த வாழ்த்துகள்’ – பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2024
in அரசியல் செய்திகள்
0
US election 2024: `நண்பர் டொனால்ட் ட்ரம்ப்-க்கு மனமார்ந்த வாழ்த்துகள்’ – பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம்” – மோடி

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்-க்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி, “வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு நண்பர் டொனால்ட் ட்ரம்ப்-க்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் முந்தைய பதவிக் காலத்தின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, ​​இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுவதையும் நமது ஒத்துழைப்பு புதுப்பிப்பதையும் எதிர்நோக்கி உள்ளேன். ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம்.” என பதிவிட்டுள்ளார்.

அதிபராக தேர்வாகிறார் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதலே ட்ரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். அதிபராக தேர்வாக, ஒருவருக்கு 270 தேர்வாளர்கள் தேவை என்ற நிலையில், ட்ரம்ப் தற்போது வரை 267 தேர்வாளர்களை பெற்றிருக்கிறார். கமலா ஹாரிஸ் தற்போது வரை 214 தேர்வாளர்களை பெற்றிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த நிலையில், `அமெரிக்காவின் 47-வது அதிபராகிறார் ட்ரம்ப்’ என்று FOX News நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களும் ட்ரம்ப் அதிபராக தேர்வானதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

மீண்டும் முன்னேறிய ட்ரம்ப் – தற்போதைய நிலை என்ன?!

ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே ட்ரம்ப் முன்னிலையில் இருந்து வருகிறார். நடுவில் கலிஃபோர்னியா உள்ளிட்ட சில மாகாணங்களில் முன்னிலைபெற்றதன் மூலம் கமலா ஹாரிஸ் ட்ரம்ப்-ஐ நெருங்கி வந்தார். எனினும் தற்போது ட்ரம்ப் இப்போது மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். தற்போதைய நிலையில் ட்ரம்ப் கட்சி 247 தேர்வாளர்களை பெற்றிருக்கிறது. கமலா ஹாரிஸ் கட்சியானது 210 தேர்வாளர்களை பெற்றுள்ளது.

கலிஃபோர்னியாவில் கமலா முன்னிலை… ஆனாலும்..! 

கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே ட்ரம்ப் முன்னிலையில் இருந்து வருகிறார். இப்போது வரை அவர் 230 தேர்வாளர்களை பெற்றிருக்கிறார். ஆட்சி அமைக்க 270 தேர்வாளர்கள் தேவை. கமலா ஹாரிஸ் தற்போது வரை 205 தேர்வாளர்களை பெற்றிருக்கிறார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

ட்ரம்ப் முன்னிலை!

இந்திய நேரம் காலை 8:30 நிலவரப்படி, ட்ரம்ப் 4 கோடிக்கும் அதிகமான (52.4%) வாக்குகளைப் பெற்று, 198 எலெக்டோரல் வாக்குகள் வென்றுள்ளார். கமலா ஹாரிஸ் 3.5 கோடி வாக்குகளுடன் (46.2%) 99 எலெக்டோரல் வாக்குகளை மட்டுமே வென்றிருக்கிறார்.

மாகாண அளவில் ட்ரம்ப் 18 மாகாணங்களில் 50%க்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேவேளையில் கமலா 8 மாகாணங்களில் மட்டுமே 50%க்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேர்தலில் வெல்ல 270 எலெக்டோரல் வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தேர்தல்: ட்ரம்ப் முன்னிலை..!

கமலா ஹாரிஸ் – ட்ரம்ப்

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி, இன்று காலை முடிவடைந்தது. தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தொடக்க நிலையில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி ட்ரம்ப் 53 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறார். கமலா ஹாரிஸ் 45 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில், ட்ரம்ப் கட்சி தற்போது 95 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரம் கமலா ஹாரிஸ் 35 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறார். எனினும் இன்னும் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது தான் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.!

வாக்குப்பதிவுக்குப் பிறகு என்ன?

அமெரிக்காவில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாட்டின் பல இடங்களில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்திய நேரப்படி நவம்பர் 6 காலை 6:30 மணியளவில் வாக்குபதிவு நிறைவடையும்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த கொஞ்ச நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். வாக்கு எண்ணிக்கையை வைத்து அதிபர்களை அறிவித்துவிட மாட்டார்கள். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் அதிகம் பெற வேண்டும். மக்கள் வாக்குகளின் அடிப்படையிலேயே எலெக்டோரல் காலேஜில் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.

மொத்தமுள்ள 538 எலெக்டோரல் வாக்குகளில் 270க்கு மேல் பெறுபவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தொடங்கியது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி மாலை 5:30 மணியளவில் தொடங்கியது. மேரிலேண்ட் உள்ளிட்ட பல மாகாணங்களில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

#USElection2024 | Voters in Maryland queue outside a polling station to cast their vote in presidential election 2024 pic.twitter.com/yjz4GnoJpF

— ANI (@ANI) November 5, 2024

இந்தியா – அமெரிக்கா உறவில் தாக்கம் ஏற்படுமா?

அமெரிக்கா அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கவிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “தேர்தல் வெற்றியாளர் யாராக இருந்தாலும் இந்தியா-அமெரிக்கா உறவு தொடர்ந்து வலுபெறும்” என்று பேசியுள்ளார்.

ட்ரம்ப்பை விட கமலாவின் வெற்றி இந்தியாவுக்கு சமூகமாகவும் சாதகமாகவும் இருக்கும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கர்

அமெரிக்க தேர்தல்… அதிபரைத் தீர்மானிக்கும் 7 மாகாணங்கள்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிபரை தீர்மானிக்கும் 7 மாகணங்களாக குறிப்பிடப்படுவன,

பென்சில்வேனியா

ஜார்ஜியா

வட கரோலினா

மிச்சிகன்

அரிசோனா

விஸ்கான்சின்

நெவாடா ஆகியன. இந்த மாகாணங்களை ஸ்விங் ஸ்டேட்ஸ் என அழைக்கின்றனர்.

இறுதி பிரசாரத்தை முடித்த ட்ரம்ப்!

மிச்சிகன் மாகாணம் கிராண்ட் ராபிட்ஸ் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் உரையாற்றி தனது இறுதி பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப்.

தொடர்ந்து 3வது தேர்தலில் இறுதி பிரசாரத்தை கிராண்ட் ராபிட்ஸில் நிறைவு செய்திருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் அவர் 900 பேரணிகளில் கலந்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

1964 முதல் இன்று வரை நடைபெற்ற தேர்தல்களில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் பெற்ற இடங்கள் எத்தனை?

1972ம் ஆண்டு அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருந்துள்ளது. வெறும் 17 இடங்களை மட்டும் வென்று படுதோல்வி அடைந்தது ஜனநாயகக் கட்சி.

1980ல் ரொனால் ரீகன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது 49 இடங்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். 1984ம் ஆண்டு அவர் இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்கும்போது ஜனநாயக கட்சி 13 இடங்கள் மட்டுமே வென்றிருக்கிறது.

 ட்ரம்ப் முன்னிலை பெறுகிறாரா?

ட்ரம்ப் – கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, இந்த 7 மாகாணங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர். இந்த மாகாணங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரிக்கு சரி போட்டி!

அமெரிக்காவின் தேர்தல் களம் இரண்டு கட்சிகளுக்கும் சாதகமில்லாமல் சரி நிகர் போட்டியாக உள்ளது. இந்த தேர்தலில் இரு கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவலாம் என்கிறார்கள்.

வாக்குப்பதிவு எப்போது?

உலக நாடுகள் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு மாகாணங்களிலும் தேர்தல் நேரத்தில் வித்தியாசம் இருக்கலாம். எனினும் பொதுவாக இந்திய நேரப்படி இன்று மாலை 5:30 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 5:30 மணிக்கு முடிவடையும்.

டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்

வாக்கு எண்ணிக்கை?

வாக்குப்பதிவு முடிந்த உடனேயே மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிவிடும். எனினும் வாக்கு எண்ணிக்கை இந்தியாவில் உள்ளது போல் ஒரே நாளில் முடிவடையாது. போட்டு கடுமையாக இருக்கும் பட்சத்தில் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாக 3 நாள்கள் முதல் ஒரு வாரம் வரையில் ஆகலாம் என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY





.

Previous Post

Tamilnadu News Live November 5, 2024: Tamil Top 10 News: நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு முதல் விமான கட்டணம் இருமடங்கு வசூல் வரை

Next Post

அமெரிக்க தேர்தல்: அடுத்த அதிபரை தீர்மானிக்க பெரும் பங்களிக்கப் போகும் முக்கிய மாகாணங்கள் விவரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்க தேர்தல்: அடுத்த அதிபரை தீர்மானிக்க பெரும் பங்களிக்கப் போகும் முக்கிய மாகாணங்கள் விவரம்

அமெரிக்க தேர்தல்: அடுத்த அதிபரை தீர்மானிக்க பெரும் பங்களிக்கப் போகும் முக்கிய மாகாணங்கள் விவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In