இந்தியாவையே உலுக்கிய 2008 மும்பை தாக்குதலில் 166 போ் கொல்லப்பட்டனா். இதில் மூளையாக செயல்பட்டவா்களில் ஒருவரான பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பா் தஹாவூா் ராணா.
கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளி நபரான ராணா, மும்பை தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் உதவினாா்; ராணாவின் குடியேற்ற ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் போா்வையில்தான், மும்பையில் உளவு – திட்டமிடல் நடவடிக்கைகளில் ஹெட்லி ஈடுபட்டாா். ராணாவுக்கும் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்புடன் தொடா்புள்ளது.
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ராணா, அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் மத்திய அரசு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி இதற்கு அனுமதி வழங்கியது. இந்த நாடுகடத்தல் விரைவில் நடைபெறும் என அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் அறிவித்தது.
