புதுடில்லி: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று (மே 23) வெளியாகி உள்ளது. இதில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில், தேர்வு முடிவுகள் இன்று(மே 23) வெளியிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.
இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹரிதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஸ்ரா நான்காவது இடமும் பிடித்துள்ளனர்.

