Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மணிப்பூரில் ஓயாத கலவரம் : 48 மணி நேரத்தில் 7 பேர் கொலை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 19, 2024
in Default
0
மணிப்பூரில் ஓயாத கலவரம் : 48 மணி நேரத்தில் 7 பேர் கொலை..!
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில் அங்கு கடந்த 48 மணிநேரத்தில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த அங்கு ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்நிலையில்,  கடந்த ஆண்டு மணிப்பூரில் வன்முறை வெடித்தது. அங்கு வசிக்கும் குக்கி மற்றும் மைத்தேயி இனக்குழுக்களுக்கு இடையே நடந்த பிரச்சினை  வன்முறையாக வெடித்தது. இதையடுத்து ஒட்டுமொத்த மணிப்பூரும் முடங்கியது. இந்நிலையில், அங்கு இந்திய ராணுவம் களம் இறக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

ஆனாலும் கடந்த டிசம்பர் மாதம் முதல் மீண்டும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கிள்ளன. ஆயுதமேந்திய நபர்களுக்கும், போலீஸார்  மற்றும் ராணுவத்துக்கும் இடையே மோதல்  தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தெங்னவ்பால் மாவட்டத்தில் உள்ள மோரா நகரில் நேற்று 2 காவலர்கள் உள்பட 3 பேர் ஆயுதமேந்திய கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் அங்கு வன்முறை அதிகரித்துள்ளது. இம்பாலில் இருந்து சுமார் 42 கிமீ தொலைவில் உள்ள நிங்தௌகாங் கா-குனோவில் நேற்று, தியாம் சோமென் சிங் (50), நிங்தௌஜம் நபாடிப் மெய்தேய் 38), ஒய்னம் பமோல்ஜாவ் சிங் (63) மற்றும் அவரது மகன் ஒய்னம் மனிதோம்பா சிங் (32) ஆகிய நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மோரே நகரில் ஏற்பட்ட வன்முறையின் எதிரொலியாக நடந்த சண்டையில் இவர்கள் கொலைசெய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸார்  சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே  வன்முறை பாதித்த பகுதிகளில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மோரே உள்பட பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) முன்னாள் தலைமை இயக்குநர் குல்தீப் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள்.

அத்துடன், காவல் துறையை முதல்வர் பீரன் சிங் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த தொடர் போராட்டத்தால் அந்த பகுதிகளுக்கு தரைவழியாக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மணிப்பூர் மாநில முதல்வர் பீரன் சிங் சார்பில் மத்திய அரசிடம் ஹெலிகாப்டர் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ஹெலிகாப்டர்கள் தற்போது மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

அயோத்தி தீர்ப்பை வழங்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு..

Next Post

BARBEQUE NATION டெலிவரி செய்த உணவில் செத்த எலி : உணவு பாதுகாப்பு துறை அளித்த அதிர்ச்சி தகவல்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
BARBEQUE NATION டெலிவரி செய்த உணவில் செத்த எலி : உணவு பாதுகாப்பு துறை அளித்த அதிர்ச்சி தகவல்..

BARBEQUE NATION டெலிவரி செய்த உணவில் செத்த எலி : உணவு பாதுகாப்பு துறை அளித்த அதிர்ச்சி தகவல்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In