புதுடெல்லி: அடுத்த தேர்தல்களில் “படிக்காத வேட்பாளர்களுக்கு” வாக்களிக்க வேண்டாம் என்று மாணவர்களை வலியுறுத்திய ஆசிரியரை , எட்-டெக் தளமான அனாகாடமி அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது .
நிறுவனத்தின் இணை நிறுவனர் ரோமன் சைனி கூறுகையில், வகுப்பறை “தனிப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான இடமாக இல்லை” என்பதால், “நடத்தை விதிகளை மீறியதற்காக” கரண் சங்வான் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார்.
ஒரு ஆன்லைன் விரிவுரையில், கரண் சங்வான், குறிப்பாக யாரையும் குறிப்பிடாமல், படிக்காதவர்களை அதிகாரப் பதவிகளில் வைக்க வேண்டாம் என்று தனது மாணவர்களை ஊக்குவித்தார்.

