ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான்கள் பெண்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளினால் குழந்தைத் திருமணம் 25%அதிகரிக்கும் எனவும், இளம்பருவத்தில் குழந்தைபேறு பெறும் பெண்களின் எண்ணிக்கை 45% சதவிகிதமாக உயரும் என ஐக்கிய நாடுகள் சபை(UN) எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு, பன்னாட்டு குடிப்பெயர்வு நிறுவனம்( IOM), ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் உதவித் திட்டம் (UNAMA) ஆகியோரால் கூட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆப்கான் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடம் அவர்கள் வைக்கும் அவசர வேண்டுகள்களும் விவரிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கல்வி மற்றும் ஒட்டுமொத்த தலிபன்களின் கொள்கைகளின் விளைவுகளை இந்த அறிக்கையானது வெளிப்படுத்துகிறது.

ஐக்கிய நாடுகள் ஆப்கானிஸ்தானில் பெண்களின் மீதான கட்டுப்பாட்டுகளினால் குழந்தை திருமணம் 25% அதிகரிப்பது மட்டுமல்லாமல், 45% இளம்பெண்கள் சீக்கிரமாக குழந்தை பெற்றுக்கொள்வது மற்றும் இறப்பு விகிதங்கள் 50% அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். ஆப்கான் பெண்களில் 82% பேர் தற்போது மோசமான மனநிலை பாதிப்பில் உள்ளதாகவும் அதிர்ச்சியூட்டும் ஊட்டும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்கள் ஆப்கான் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையை காட்டுகிறது. ஆப்கான் பெண்கள் மற்றும் சிறுமிகளின் இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொள்வதற்கும் உடனடியாக அந்த சூழ்நிலையை கையாண்டு நடவடிக்கை எடுப்பதற்கான அழைப்பாக இந்த எச்சரிக்கை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


எச்சரிக்கை செய்யும் இந்த ஐக்கிய நாட்டு சபைக்கு நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை