உக்ரைன் – ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஷிய அதிபர் விளாதீமிர் புதினை சந்தித்துப் பேசினார்.
தொடர்ச்சியாக ஐரோப்பிய தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
உலக நாடுகளிடையே சமீபகாலமாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவந்ததைப்போன்று, ரஷியா – உக்ரைன் இடையிலான போரையும் முடிவுக்கு கொண்டுவருவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதனிடையே, தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரோஜியா மாகாணத்திற்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷியாவுக்குச் சொந்தமான சரக்கு ரயில் மீது உக்ரைன் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
