3 வருட இளங்கலை பட்டப் படிப்பை 2 வருடங்களிலும் 4 வருடப் பட்ட படிப்பை 3 வருடங்களிலும் படித்து முடிக்கும் நடைமுறைக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் அளித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றிருக்கும் இந்த நடைமுறை குறித்து விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “3 வருட இளங்கலை பட்டப் படிப்பை மாணவர்கள் விருப்பப்பட்டால், 2 வருடங்களிலும், 4 வருடப் பட்ட படிப்பை 3 வருடங்களில் முடிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் எம். ஜெகதீஷ்குமார் கடந்த நவம்பர் மாதம் கலந்தாய்வு ஒன்றில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கொடுத்திருக்கிறது பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) . இதுதொடர்பான செய்திக்குறிப்பில், “மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்றார்போல் பட்டப்படிப்புகளை ஓராண்டுக்கு முன்பே முடிந்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கால அளவைவிடக் கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் புதிய நடைமுறையில் உள்ளது. உதாரணமாக, 3 ஆண்டு படிப்பை 4 ஆண்டுகள் வரையும் நீட்டித்துக் கொள்ளலாம்.
