அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சட்டமன்றத் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் 18-08-2025 தேதி அன்று வேலூர் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வந்தது. இதனால் எரிச்சலான எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆம்புலன்சை விட்டு பிரச்னை செய்துகொண்டு இருக்கிறீர்கள். நான் பேசிய 30 கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்களை இடையூறாக விட்டு உள்ளனர்.

இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்குச் செல்வார். இதுகுறித்து காவல் துறையில் நிர்வாகிகள் புகார் அளிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
