நரேந்திர மோடி அரசாங்கம் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பட்டும். ஆனால், முதலில் நாட்டில் வெங்காய பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு விமர்சித்துள்ளது.
சிவசேனாவின் (உத்தவ் பிரிவு) பத்திரிகையான சாம்னாவின் இன்றைய தலையங்கத்தில், வெங்காயத்திற்கு 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை அக்கட்சி கண்டித்துள்ளது. ” மத்திய அரசு சந்திரன் திட்டம், சூரியன் திட்டம் மற்றும் வெள்ளி திட்டம் போன்ற புதிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சூரியனுக்கான விண்கல திட்டம் எல்லாம் நன்றாக இருக்கிறது, ஆனால், மாநிலத்தில் வெங்காய பிரச்சினை சீராக இருப்பது மிகவும் அவசியம்.

நீங்கள் சூரியனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்புகிறீர்கள். ஆனால், அதற்கு முன் வெங்காயப் பிரச்சினை தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், இல்லையெனில் 2024-ம் ஆண்டு வரை உங்கள் திட்டம் வீணாகிவிடும், அதை நீங்கள் கூட உணர மாட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளது

மகாராஷ்டிராவின் நாசிக், அகமதுநகர் மற்றும் புனே மாவட்டங்கள் வெங்காய உற்பத்திக்கு பெயர் பெற்றவை. வெங்காயத்திற்கு 40 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

