Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“திமுக கூட்டணியில் விரிசல் விழாதா என துண்டு போட்டு காத்திருக்கின்றனர்.." – உதயநிதி விளாசல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2024
in அரசியல் செய்திகள்
0
“திமுக கூட்டணியில் விரிசல் விழாதா என துண்டு போட்டு காத்திருக்கின்றனர்.." – உதயநிதி விளாசல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தஞ்சாவூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற முரசொலி செல்வம் படத்திறப்பு விழா, எம்.பி அலுவலகம் திறப்பு விழா, கலைஞர் நூலகம் திறப்பு விழா, முதலமைச்சர் கோப்பை விளையட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, திருமணம், நலத்திட்ட உதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தஞ்சாவூர் மஹாராஜா மஹால் மண்டபத்தில் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு மகள் திருமணம் நடைபெற்றது.

தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின்

நானும் டெல்டாக்காரன் – உதயநிதி

இந்த திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, நான் துணை முதல்வராக வரவேண்டும் என்று முதல் குரல் கொடுத்தவர் முன்னாள் எம்.பி பழநிமாணிக்கம் தான். அதன் பிறகு நான் துணை முதல்வராக நியமிக்கப்பட்டேன். நவம்பர் மாதம் மழை பெய்யும் மாதம் என்பார்கள். இன்று நான் உங்கள் அன்பு மழையில் நனைந்து தஞ்சாவூருக்கு வந்திருக்கிறேன். கலைஞர் கருணாநிதி தஞ்சாவூர் தொகுதியில் நின்று வென்றவர். தஞ்சாவூர் மண்ணில் அவர் கால் படாத இடமே கிடையாது. முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி நான் டெல்டாக்காரன் என்பார். அதேபோல் நானும் டெல்டாக்காரன் என்ற பெருமையோடு இந்த திருமணத்தை நடத்தி வைத்தேன்.

திராவிடம் மாடல் ஆட்சி…

இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். நிதி ஆயோக் ஒன்றிய புள்ளி விவர அறிக்கையில் கூட இது கூறப்பட்டுள்ளது. திராவிடம் மாடல் ஆட்சியை பின்பற்றி தான் பல மாநிலங்களில் ஆட்சி நடக்கிறது. மகளிர் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என செயல்படும் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், இலவச பஸ் பயணம் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்.

தஞ்சாவூர் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின்

திமுகவை அழிப்பேன் என்று…

இன்றைக்கு திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பியிருக்கின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அதற்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள். திமுக தொண்டர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இந்த உற்சாகம் தான் நம்முடைய எதிரிகளுக்கு மிகுந்த எரிச்சலை தருகிறது. தலைவர் தலைமையில் நாம் அடைகின்ற தொடர் வெற்றி தான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை தருகிறது.

திமுக கூட்டணி

பல அணிகளாக பிரிந்து கிடக்கும் அ.தி.மு.கவும், யாருமே சீண்டாத பா.ஜ.கவும் எப்படியாவது தி.மு.க கூட்டணியில் விரிசல் விழாதா என துண்டு போட்டு காத்திருக்கின்றனர். நம் கூட்டணி வலுவாக உள்ளது என முதல்வர் சொல்லி விட்டார். கூட்டணி கட்சித் தலைவர்களும் தெளிவாக இருக்கிறார்கள். எனவே நம் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் ஒன்றரை வருடங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது.

எ.பி அலுவலகம் திறப்பு விழாவில்
உதயநிதி ஸ்டாலின்

தஞ்சையில் போடும் தீர்மானம் நிறைவேறும்..

2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 2-வது முறையாக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார், 7-வது முறையாக திமுக ஆட்சி அமைத்தது என்ற வரலாற்றை உருவாக்குவோம். அதற்காக உறுதியை தஞ்சை மண்ணில் ஏற்போம் என்றார். தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க.வில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அது நிறைவேறும் என துரை.சந்திரசேகரன் சொன்னார்.

குறிப்பாக நான் இளைஞரணி செயலாளராக வேண்டும் என்று முதன் முதலில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றினார்கள் அது நிறைவேறியது. அதன் பின்னர் அமைச்சராக வேண்டும் என்றும், துணை முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள் அதுவும் நிறைவேறியது. அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என துரை.சந்திரசேகரன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். தீர்மானமாக மட்டும் இல்லாமல் அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.



.

Previous Post

கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக் கொலை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக் கொலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In