நேற்று முழுவதும் எந்தத் தமிழ் செய்தி சேனல்கள், வலைதளங்கள் பக்கம் திருப்பினாலும், சமூக வலைதளத்தை ஸ்க்ரால் செய்தாலும் “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடும், விஜய்யும்’ தான் ஹாட் டாப்பிக். தமிழ் செய்தி சேனல்களில் இருந்து சற்று விலகி வந்து, தேசிய மற்றும் பிற மாநில தமிழ் செய்தி ஊடகங்கள் ‘விஜய் மாநாட்டை’ என்னவாக குறிப்பிட்டிருக்கிறது என்று சற்று பார்ப்போம்.
தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பல தேசிய செய்தி ஊடகங்களின் த.வெ.க மாநாட்டின் தலைப்புகளே ‘நேற்று நடந்த மாநாட்டில் விஜய் திமுக-வை சாடியது தான்’. அதிலும் ‘சுயநல குடும்பம்’ என்று த.வெ.க தலைவர் விஜய் குறிப்பிட்டது பெரும்பாலான தலைப்புகளில் இடம்பெற்றிருக்கிறது.

