அண்ணா, எம்ஜிஆர் தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத காரணத்தால் விஜய், அண்ணா குறித்தும், எம்ஜிஆர் குறித்தும் பேசுகிறார்.
விஜய்க்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து விஜய் பேசினால் அது அவருக்குத்தான் பின்னடைவாக மாறும். திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணி தான் சரியானது எனத் தேசியக் கட்சிகளுக்குக் கூட தெரிந்துள்ளது.

விஜய் கட்சி தொடங்கியவுடன் ஆட்சியைப் பிடித்து விடலாம் எனக் கனவு காண்கிறார்.
அதிமுக குறித்து விஜய் விமர்சனப் பேச்சுக்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதிமுக தொண்டர்கள் மனவேதனையுடன் உள்ளார்கள் என்பது விஜய்க்கு எப்படித் தெரியும்? எந்தத் தொண்டரிடம் விஜய் பேசினார்.
யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்து பேசியிருக்கலாம்.
முதல் மாநாட்டில் திமுகவை பாயாசம் என்றார் விஜய். இந்த மாநாட்டில் பாய்சன் என்கிறார்.
அடுத்த மாநாட்டில் அமுது என்று பேசுவாரா? என்ன பேசுவார் என்று தெரியாது. அவருக்கு மட்டும்தான் தெரியும்” என்று விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
