Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK: "என் இயல்பை மீறிய வார்த்தைகள்; வருந்துகிறேன்" – சர்ச்சை வீடியோவுக்கு ஆதவ் விளக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 2, 2025
in அரசியல் செய்திகள்
0
TVK: "என் இயல்பை மீறிய வார்த்தைகள்; வருந்துகிறேன்" – சர்ச்சை வீடியோவுக்கு ஆதவ் விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் உலாவிக்கொண்டிருந்தது.

அந்த வீடியோவில், எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜூனா ஒருமையில் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தது.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோ குறித்து எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜூனா, “எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது.

ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது.

Seeman: “அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு” – ரகசியம் சொல்லும் சீமான்!

என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும். என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.

உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன்.

தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன்.

அனைவருக்கும் வணக்கம்,

எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன்…

— Aadhav Arjuna (@AadhavArjuna) June 1, 2025

அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.

அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்துப் பயணிப்பதே எனது இலக்கு.” என்று வருத்தம் தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார்.

TVK Vijay Full Speech – வண்டி வண்டியா கொள்ளையடிச்ச பணம் அது | விஜய் கல்வி விருது வழங்கும் விழா!





.

Previous Post

ரயில்வே நடைமுறையால் பயணிகள் கடும் அவதி!

Next Post

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In