இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜய் “எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர். கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
சரவணனின் இறுதிச்சடங்கிற்குச் சென்ற தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த், அவரது உடலைப் பார்த்துக் கதறி அழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ஏன்டா இப்படிப் பண்ண, 5 நிமிஷத்துல வரேன்னு சொன்னியே டா..” என உடைந்து ஆனந்த் அழுகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
