Last Updated:
கர்நாடகத்தில் 48 எம்.எல்.ஏ.க்களிடம் பெண்களை நெருக்கமாக பழக வைத்து ரகசிய தகவல்கள் திருட முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. விசாரணைக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா ஆணையிட்டார்.
கர்நாடகத்தில் 48 எம்.எல்.ஏ.க்களிடம் பெண்களை நெருக்கமாக பழகவிட்டு பின்னர் ரகசிய தகவல்களை, மிரட்டி பெற முயற்சி நடப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கட்சி பேதமின்றி 48 எம்.எல்.ஏ.க்களை பெண்களுடன் நெருக்கமாக பழக வைத்து ரகசிய தகவல்கள் திருட முயற்சி நடப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன. அரசியல் நோக்கத்திற்காக இதனை ஒரு கும்பல் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டில் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டினர். இது பற்றி புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளும் காங்கிரஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு ஆணையிட இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறினார். இந்த சூழலில் மிரட்டல்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தேவை என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சிடி ரவி கோரியுள்ளார்.
March 21, 2025 11:23 AM IST

