ரஷ்யா – உக்ரைன் போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அதற்கேற்றாற்போல், ரஷ்யாவிற்கு கெடுபிடி கொடுக்க, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் பிரேசில் மீது கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறார்.
ஆனால், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இன்னொரு நாடான சீனா மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை ட்ரம்ப். காரணம், அமெரிக்கா, சீனா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை.
அதிபர் டொனால்டு ஜெ. ட்ரம்பால் நேட்டோ நாடுகள் மற்றும் உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்:
அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதும், ரஷ்யா மீது பெரும் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஒப்புக்கொண்டு, அவர்களும் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும்போதும், நானும் ரஷ்யா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராக இருக்கிறேன்.
