அந்தச் சந்திப்பின் போது, அமெரிக்காவின் ஒத்துழைப்போடு, பிற ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு கொடுக்க உள்ள பாதுகாப்பு உறுதி குறித்து பேசப்பட்டது.
ரஷ்யா/உக்ரைன் அமைதிக்கான வாய்ப்பு குறித்து அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.
சந்திப்பின் இறுதியில், நான் அதிபர் புதினுக்கு போன் செய்து, அதிபர் புதின் மற்றும் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். இந்தச் சந்திப்பு நடக்கும் இடத்தை இன்னும் தீர்மானிக்கவில்லை.
அந்த மீட்டிற்கு பிறகு, நான், அவர்கள் இருவர் என முத்தரப்பு சந்திப்பு நடக்கும். மீண்டும், இது ஒரு நல்ல விஷயம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் போர் நிறுத்தத்திற்கு இது ஆரம்ப படி.
துணை அதிபர் ஜே.டி வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ரஷ்யா, உக்ரைனுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
