ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு
நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்து முடிந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஏழு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
கடந்த 15-ம் தேதி, ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடந்த நிலையில், “போர் நிறுத்தம்’ குறித்து ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்தது.

பேச்சுவார்த்தை வார்த்தையில் முன்னேற்றம்
இந்தச் சந்திப்பிற்கு பிறகு, ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இன்று, வாஷிங்டன்னில் முக்கியமான பேச்சுவார்த்தை நடந்தது. அதிபர் ட்ரம்பிடம் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினோம். அந்த நீண்ட மற்றும் விரிவான உரையாடலில், போர்க்களத்தின் சூழல் மற்றும் அமைதியைக் கொண்டுவருவதற்கான எங்களது முயற்சிகள் குறித்தும் பேசினோம்.
ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபருடன் பல்வேறு சந்திப்புகளும் நடந்தது.
பாதுகாப்பு உறுதிகள் குறித்து விவாதித்தோம். இது போர் நிறுத்தத்திற்கான ஆரம்பத்தின் முக்கிய விஷயமாகும்.
பாதுகாப்பு உறுதியின் ஒரு பகுதியாக இருப்பதிலும், ஆதரவாக இருப்பதிலும் அமெரிக்கா காட்டும் முக்கிய சிக்னலை நாங்கள் பாராட்டுகிறோம்.
