Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ட்ரம்ப் ஈரான் தாக்குதல்: ‘Make Iran Great Again’ – ட்ரம்ப் சமூக வலைதளப் பதிவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 23, 2025
in அரசியல் செய்திகள்
0
ட்ரம்ப் ஈரான் தாக்குதல்: ‘Make Iran Great Again’ – ட்ரம்ப் சமூக வலைதளப் பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நேற்று முன்தினம், யாரும் எதிர்பார்க்காத விதமாக, அமெரிக்கா ஈரானின் (Iran) அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியது. இது இஸ்ரேலுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதலை அடுத்து, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றம் கொண்டுவர நினைக்கிறாரா?’ என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்தக் கேள்விக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட ட்ரம்ப் அரசில் இருக்கும் பலர் மறுப்பு தெரிவித்தனர்.

ட்ரம்ப் - நெதன்யாகு

ட்ரம்ப் – நெதன்யாகு

இந்த நிலையில், தற்போது ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், “அரசியல் ரீதியாக, `ஆட்சி மாற்றம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. ஆனால், இப்போது ஈரானில் இருக்கும் ஆட்சியால், ‘ஈரானை மீண்டும் சிறப்பானதாக மாற்ற முடியவில்லை’ என்றால், ஏன் ஆட்சி மாற்றம் இருக்கக்கூடாது? MIGA!!!” என்று பதிவிட்டுள்ளார்.

அவர் MIGA என்று குறிப்பிடுவது ‘Make Iran Great Again’. ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்ற கோஷத்தை முன்னெடுத்து தான் அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் போரில், ‘இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பங்குக்கொள்ளும்… பங்குக்கொள்ளாமலும் போகும்’ என்று ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார். ஆனால், திடீரென்று தனது ராணுவத்தை ஈரானில் களமிறக்கினார். ‘அந்த மாதிரியான ஒன்றாக இது இருக்குமோ?’ என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.



.

Previous Post

’குழந்தைகள் தைரியமாக திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்’ அண்ணாமலை ஆவேச பேச்சு!

Next Post

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது: ஈரான் தலைவர் கமேனி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது: ஈரான் தலைவர் கமேனி

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது: ஈரான் தலைவர் கமேனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In