Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு… முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 22, 2025
in அரசியல் செய்திகள்
0
Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு… முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நேற்றைய தினம் (ஜனவரி 20) அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க் முதல் அம்பானி வரை முதலாளிகள் புடை சூழ நடைபெற்றது பதவியேற்பு.

அமெரிக்க வரலாற்றில் ஒரு தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் அதிபராக வெற்றிபெற்ற இரண்டாவது நபர் ட்ரம்ப். முந்தைய ஜனநாயககட்சி, குடியரசுக்கட்சிகளின் அணுகுமுறையிலிருந்து… ஏன் முந்தைய ட்ரம்ப்பின் அணுகுமுறையில் இருந்தே மாறுபட்ட விதத்தில் இந்த ஆட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trump
Trump : `மஸ்க் டு சுந்தர் பிச்சை; திரண்டு வந்த VIP-க்கள் – ட்ரம்ப் பதவியேற்பு விழா | போட்டோ ஹைலைட்ஸ்

எப்போதும் அமெரிக்கா உலகுக்கு வழிகாட்டும் வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அதிபர்களிடமிருந்து வேறுபட்டு, “அமெரிக்காவை வளரும் நாடாகவேப் பார்க்கிறேன்” எனக் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்துக்காக பல மில்லியன் டாலர்கள் செலவு செய்த எலான் மஸ்க் அவரது வருகையை “The Return of the King” எனக் கொண்டாடுகிறார். தீவிர வலதுசாரிகளும் முதலாளிகளும் எதிர்பார்த்த அமெரிக்கா உருவாகவிருக்கிறது. இதன் முதற்படியாக இன்றே பல அதிர்ச்சி தரும் ஆணைகளை பிறப்பித்துள்ளார் ட்ரம்ப்.

Trump 2.0

  • திருநங்கைகள் பாதுகாப்பு சட்டங்களை நீக்கி, அமெரிக்க அரசு ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளார்.

  • மெக்சிகோ வளைகுடாவை (Gulf of Mexico) அமெரிக்க வளைகுடா (Gulf of America) எனப் பெயர் மாற்றியுள்ளார்.

  • அதேப்போல அலாஸ்காவின் 2000 அடி டெனலி மலைக்கு மெக்கென்லி மலை என்ற பழைய பெயரையே மீண்டும் சூட்டியுள்ளார். (2015ம் ஆண்டு அதிபர் ஒபாமா டெனலி மலை எனப் பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.)

Trump
Donald Trump: `அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இருபாலர் மட்டுமே’ – அதிபராக முதல் உரையில் ட்ரம்ப்
  • அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, பெற்றோர் எந்த நாட்டவராக இருந்தாலும் குழந்தை அமெரிக்க மண்ணில் பிறந்தால் அதற்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் முறையை மாற்றுவதாக உறுதிபூண்டுள்ளார்.

  • அடுத்த 90 நாள்களுக்கு அனைத்து அமெரிக்க வெளிநாட்டு உதவி திட்டங்களையும் நீக்கியுள்ளார். அனைத்து திட்டங்களையும் மறுபரிசீலனை செய்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

  • காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்துக்கு எதிராகவும் உலக வெப்பநிலையை குறைப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம்.

  • எல்லைப்புறத்தில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மெக்சிகோவிலிருந்து எல்லை வழியாக மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க எல்லைகளில் இராணுவத்தைப் பலப்படுத்தியிருக்கிறார்.

  • உலக சுகாராத அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா WHO-க்கு பெரிய அளவில் நிதியுதவி செய்தபோதும் கோவிட் முதலான பெருந்தொற்று நேரத்தில் WHO சரியாக செயல்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

  • எரிபொருள் அவசரநிலையை அறிவித்திருக்கிறார். கச்சா எண்ணெய் எடுப்பதை அதிகரிக்க உத்தரவிட்டதோடு, பைடனின் மின்சார வாகன ஆணையைத் திரும்பப் பெற்றுள்ளார். அலாஸ்காவில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த முந்தைய பைடன் அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளார்.

Biden-Kamala
Trump : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்!
  • பிப்ரவரி 1 முதல் கனடா மற்றும் மெக்சிகோவிற்கு 25% இறக்குமதி கட்டண உயர்வு செய்யவும் சீன பொருள்களுக்கான இறக்கு மதி கட்டணத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறியுள்ளார்.

  • உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் இருப்பவர்களை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளார்.

  • டிக்டாக் செயலியை தடை செய்வதை 75 நாட்கள் தள்ளி வைத்துள்ளார்.

  • கடந்த 29ம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைந்ததால் ட்ரம்ப் பதவியேற்பு நாளில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டது. இதனால் கோபமான அவர் இனி அனைத்து அதிபர் பதவியேற்பு நாளிலும் கொடி உச்சியில் பறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • அமெரிக்காவில் புகலிட கோரிக்கை வைத்துள்ளவர்கள், உத்தரவு வரும்வரை மெக்சிகோவிலேயே இருக்க உத்தரவிட்டுள்ளார்.

  • பைடன் ஆட்சி காலத்தில் 1 மில்லியன் வெளிநாட்டவர்கள் சட்டப்பூர்வமாக குடியேற வாய்ப்பு வழங்கிய CBP One செயலியை நீக்க உத்தரவிட்டுள்ளார்.

  • இராணுவம் மற்றும் சிறப்பு அரசுத் துறைகள் தவிர, பிறத் துறைகளில் அரசு வேலைவாய்ப்பை நிறுத்தி வைத்துள்ளார்.

  • அரசின் செலவீனங்களைக் குறைத்து செயல்திறனை அதிகரிக்க அரசு திறன் துறைக்கு (Department of Government Efficiency) பல்வேறு அதிகாரங்களை வழங்கியுள்ளார். இந்த துறை தொழிலதிபர் எலான் மஸ்கால் வழிநடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Elon musk
Trump: White Houseல் பிரம்மிக்க வைக்கும் பரபர மாற்றங்கள் | Decode
  • 2021 ஜனவரி 6ம் தேதி தலைநகரில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய 1500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

  • பைடன் காலத்தில் அரசியல் எதிரிகளாக கருதப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன.

  • அரசு அதிகாரிகள், ஏஜெண்ட்கள் மற்றும் ஊழியர்கள் அமெரிக்க மக்களின் பேச்சு சுதந்திரத்தில் சட்டத்துக்குபுறம்பாக தலையிடுவதை தடைசெய்யும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

  • அரசு வழக்கறிஞர் பைடன் காலத்தில் பேச்சு சுதந்திரத்து எதிரான வன்முறைகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

  • போதைப்பொருள் விநியோக குழுக்களை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளார்.



.

Previous Post

"மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தைக் குடிக்க மாட்டீங்களா?" – தமிழிசை சொல்வதென்ன?

Next Post

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் தங்கம் பறிமுதல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் தங்கம் பறிமுதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In