Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

விஜய், அஜித், ஹீரோயின் சென்ட்ரிக் – அசத்தும் த்ரிஷாவின் அடுத்தடுத்த படங்களின் என்னென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2023
in சினிமா செய்திகள்
0
விஜய், அஜித், ஹீரோயின் சென்ட்ரிக் – அசத்தும் த்ரிஷாவின் அடுத்தடுத்த படங்களின் என்னென்ன?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்குப் பின், உற்சாகத்தில் புன்னகைக்கிறார் த்ரிஷா. அடுத்து விஜய்யுடன் நடிக்கும் ‘லியோ’ படப்பிடிப்பும் பரபரப்பதால், செம பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் த்ரிஷாவின் அடுத்த படங்கள் குறித்த விவரங்கள் இங்கே…

த்ரிஷா

‘மோகினி’, ‘நாயகி’, ‘கர்ஜனை’, ‘பரமபத விளையாட்டு’, ‘ராங்கி’ என ஒரு சமயத்தில் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளில் அதிக கவனம் செலுத்தி வந்த த்ரிஷா, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புக்கு முன்னர், தனது லைன் அப்களை மாற்றியமைக்க ஆரம்பித்தார். ‘ராங்கி’ படத்திற்குப் பின் ‘தி ரோடு’ என்ற ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அறிமுக இயக்குநர் அருண், இயக்கியுள்ள இப்படம் மதுரை திருமங்கலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ‘பரமபத விளையாட்டு’ படத்திற்கு முன்னர் அவர் கமிட் ஆன படம் ‘சதுரங்க வேட்டை 2’. சமீபத்தில் மறைந்த மனோபாலாவின் தயாரிப்பில் அரவிந்த்சாமியுடன் அவர் நடித்த இப்படம், சில காரணங்களால் இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது. அதனை விரைவில் வெளிக்கொண்டு வருவதற்கான வேலைகளில் மனோபாலாவின் நண்பர்கள் இறங்கியுள்ளனர்.

த்ரிஷா

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில், ‘த்ரிஷ்யம்’ ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ‘ராம்’ பாகம் ஒன்று என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பும் பெரும்பகுதி முடிந்துவிட்டது. ஒரு ஷெட்யூல் வெளிநாடுகளில் நடைபெற இருப்பதால், அதன் பின்னரே திரைக்கு வரும் என்கிறார்கள்.

தெலுங்கில் சூர்யா வங்கலா இயக்கத்தில் த்ரிஷா முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக ‘பிருந்தா’ என்ற வெப்சிரீஸில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. விரைவில் சோனி லைவ்வில் இது வெளியாகும் என்கிறார்கள்.

த்ரிஷா

தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் ‘லியோ’ படப்பிடிப்பு ஜூலையோடு நிறைவடைகிறது. இதற்கிடையே அஜித்தின் ‘விடாமுயற்சி’யிலும் நடிக்க த்ரிஷாவிடம் பேசி வருகிறார்கள். மகிழ் திருமேனி கேட்கும் தேதிகள் சரிப்பட்டு வந்தால், இதிலும் கமிட் ஆவார். ‘தூங்கா நகரம்’ கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. இதுதவிர மலையாளத்தில் ஒரு படம் பண்ணவிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

.

Previous Post

“கேவலமா” இருக்கு.. “கலைஞரை” திட்டினவங்களுக்கெல்லாம் திமுகவில் பதவி? ஸ்டாலினிடமே “இவர்” கேட்டுட்டாரே?

Next Post

மக்களே குஷியா; ஓய்ந்தது வெப்ப அலை; முன்கூட்டியே துவங்கும் தென்மேற்கு பருவமழை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மக்களே குஷியா; ஓய்ந்தது வெப்ப அலை; முன்கூட்டியே துவங்கும் தென்மேற்கு பருவமழை!

மக்களே குஷியா; ஓய்ந்தது வெப்ப அலை; முன்கூட்டியே துவங்கும் தென்மேற்கு பருவமழை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In