விசாரிச்சா, ஒரே ஒரு தூய்மைப் பணியாளர்தான் பணிக்கு வர்றதாகவும், அவரும் முறையா வர்றதில்லனும் தெரியவந்தது.
கேண்டீன் வசதி இல்லாததால், ரயில் நிலையத்தைக் கடந்து போறவங்க ஒரு தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியாத நிலைதான் இருக்கு. இரவு நேரங்கள்ல சமூக விரோதிகளின் நடமாட்டம் இருக்குனு புகார்.

நான்கு ரயில்வே காவலர்கள் பணியில் உள்ளதாகக் கூறப்பட்டாலும், நான் போனப்ப ஒரு காவலர்கூட பணியில் இல்லை.
சிறிது நேரம் கழித்து வந்த ஒரு காவலர், 12 மணி நேரம் தொடர்ந்து பணியமர்த்த படுவதாக தெரிவித்தார். இது உழைப்பு சுரண்டல் மட்டுமல்ல, மனிதாபிமானத்திற்கு எதிரானதும் கூட.
‘இதைப் பத்தி ஸ்டேஷன் மாஸ்டரிடம் பேசி, உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யவில்லையா’ன்னு கேட்டா, அவர் மௌனமாக இருந்தார்.
தனிமனிதர்களைக் குற்றம்சாட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தென்னக இரயில்வே துறையின் மதுரை கோட்டம் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்குனு தெரியலை. மக்களின் பிரதிநிதியாகக் இதைக் கேள்வி கேட்க வேண்டியது என் கடமை.
அடுத்த ஆய்வில் நான் பாராட்டும்படியாக இருக்கணும்னு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிட்ட கண்டிப்புடன் வலியுறுத்தி விட்டு வந்திருக்கேன்” என்கிறார் இவர்.

