திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“ஜூன் 14-ம் தேதியான நாளை மாலை 4 மணி அளவில் அண்ணா ஸ்டேடியம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மதசார்பின்மை காப்போம் பேரணி தொடங்குகிறது.
பேரணி டி.வி.எஸ் ரவுண்டானா, மகாத்மாகாந்தி சிலை, பெரும்பிடுகு முத்திரையர் சிலை ஆகியவற்றை கடந்து மாநகராட்சி அலுவலகம் அருகே பேரணி முடிவடைகிறது.
தமிழகம் முழுவதிலிருந்து முன்னணி பொறுப்பாளர்கள் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்கின்றனர். அகில இந்திய அளவில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு கோட்பாட்டை காக்க வேண்டும் என்று அரை கூவல் விடுவதற்கான பேரணி தான் இந்த பேரணி.
ஆர்.எஸ்.எஸ் போன்ற மதசார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரான யுத்தம் தான் இந்தப் பேரணி. வெறுப்பு அரசியல் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை ஒன்றிய பா.ஜ.க அரசு கையாளுகின்றனர்.
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் நலம் என்ற பெயரில் இந்துக்களை அணி திரட்டுவதற்காக அரசியல் செய்து வருகிறது.
சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சி அதிகாரத்தையும் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். சட்டத்தின் பெயரால், ஜனநாயகத்தின் பெயரால் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்.
முத்தலாக் , வக்ஃபு, திருத்தச் சட்டம் மதச்சார்பின்மைக்கு, அரசமைப்புக்கு எதிரானது. அரசு அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.
இந்தியாவில் பிற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா, சங்பரிவார் அமைப்புகள் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை பரப்பி இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர்.
மசூதிகளை தகர்ப்பது, தேவாலயங்களை தகர்த்தது பைபிள் குர்ஆன் போன்ற மத நம்பிக்கையாளர்களின் புனித நூல்களை எரிப்பது, மாட்டுக் கறி சாப்பிடுகிறார்கள் என்ற பெயரில் படுகொலைகளை செய்வது போன்ற கலாசாரம்மதத்தின் பெயரால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது.
